முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

ஹந்த்வாரா: காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை நடந்துள்ளது. இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறியபோது, ''வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ளது ஹந்த்வாரா. அங்குள்ள மகம் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மூன்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து