முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் குறித்து மேலப்பாளையம் குறிச்சி செயிண்ட்தாமஸ் பள்ளி, மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் சந்தீப் நந்தூரி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், குறிச்சி செயிண்ட்தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி,  மாணவ, மாணவிகள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவதன் அவசியம் குறித்து  மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைத்தார். பின்னர், கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மெகா தூய்மைப் பணிகள் மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக 100 சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மட்டும் இப்பணியாளர்கள் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் தீவிராமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 50 பணியாளர்கள் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு, மெத்தனமாக இருந்த உரிமையாளர்களுக்கு ரூ.11 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்ததுடன், தற்காலிக உரிமமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறிப்பிட்ட அளவில் டெங்கு காய்ச்சல் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளிடையே டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு கொசு எப்படி உருவாகிறது என்பதை கலெக்டர்  விளக்கமாக எடுத்துரைத்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே சிறப்பு கவனம் செலுத்தி, டெங்கு கொசு ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெங்கு கொசு ஒழிப்புக்கு பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகிலுள்ள காமராஜ்நகர் பகுதியில் நடைபெற்று வரும் மெகா தூய்மை பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி,  வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் மெத்தனமாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு துறை வாரியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, மாநகர நகர்நல அலுவலர் மரு.பொற்செல்வன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் தங்கராஜ், வட்டாட்சியர்கள் (ஆலங்குளம்) சுப்புராயலு, (தென்காசி) முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து