கடலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      கடலூர்
dengu inspection cuddalure collector

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருட்களை  கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,    நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருட்களான டயர், டீ கப் மற்றும் வாட்டர் பாட்டில், தெர்மாகோல் ஆகியவற்றினை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து சிகிச்சை பெறவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன். மேலும், கடந்த பல்வேறு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த வகையில் பல்வேறு வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தினை பொறுத்தவரை இக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும்  மேலும் இக்கொசுப்புழுக்களால் டெங்கு காய்ச்ச்ல் ஏற்படா வண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம், இளநிலை பொறியாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கலெக்டர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது உபயோகமற்ற பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரை  கலெக்டர்  கேட்டுக்கொண்டார். மேலும் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உபயோகமான பொருட்களில் மழையினால் தண்ணீர் தேங்கியுள்ளதை உடனடியாக அகற்றுவதோடு பொருட்கள் அனைத்தையும் சாய்தள வாட்டில் வைத்து பராமரிக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கினார். மேலும் வளாகத்தில் உள்ள உபயோகமற்ற பொருட்களான சேதமடைந்துள்ள விளம்பர பலகைகள், பாரல்கள் உட்பட அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பழைய வாகனத்தினை கண்டமினேஷன் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அலுவலகத்தின் மேற்புறம் மாடியில் தண்ணீர் தேங்கியுள்ளதை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு இனி தண்ணீர் தேங்காவண்ணம் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கினார்.       இந்த ஆய்வின்போது கடலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் சீனிவாசன், நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர்.எழில்மதனா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்தரன், சுகாதார ஆய்வாளர் அன்புராஜ், நகராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து