புதுவை விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன் ரூ.22 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு அனுமதி கவர்னர்- முதல்வர் மோதலில் முதல்வருக்கு மீண்டும் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரன்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னருக்கே முழு  அதிகாரம் என்று கூறிக் கொண்டு கிரன்பேடி அரசின்அனைத்து அன்றாட பணிகளிலும் தலையிட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது கவர்னருக்கு அதிகாரம்இல்லை என முதல்வர் நாராயணசாமியும்,அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதோடு அமைச்சரவையின் ஆலோசனையின் படியே கவர்னர் செயல்பட வேண்டும்  என்றும், தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் கவர்னர் கிரன்பேடி தனது அதிகாராத்தை வெளிப்படுத்தும் வகையில் நேரடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, தொகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வது பணிகளுக்கு உத்தரவிடுவது என செயல்பட்டு வருகிறார். அரசு சார்பில் அனுப்பும் கோப்புகளுக்கு அனுமதி வழங்காமல் பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புவதாகவும் ,மக்களின் நலன் சார்ந்த கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்புவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால்இலவச அரிசி, தீபாவளிக்கு சர்க்கரை, துறைமுக தூர் வாரும் பணி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல முடக்கி வைக்கப்பட்டுள்ளது. புதுவையில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தொகையான ரூ.22 கோடியை தளுளுபடி செய்ய கோப்புகள் தயார் செய்யப்பட்டு கவர்னரின்அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் இந்த கோப்புக்கும் அனுமதி தரவில்லை. மேலும்இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் சட்டசபையில் அறிவித்தும், அமைச்சரவையில் முடிவெடுத்தும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாமல் அரசு தவித்து வந்தது.

கடன் தள்ளுபடி

தற்போது மத்திய உள்துறை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சத்தின் இயக்குனர் சுதிர்குமார் ராய் அனுப்பி உள்ளார். அவர் புதுவை கவர்னரின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதுவை மாநில கூட்டுறவு கடனை நாங்கள் நேரடியாக தள்ளுபடி செய்யவோ, அதற்கான நிதியை மத்திய அரசு தரவோ இயலாது. ஆனால் புதுவை அரசு கூட்டுறவு நிறுவனங்களின் நிதிக்கேற்ப விவசாய கடனை தள்ளுபடி செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்கான கோப்புகளை புதுவை அரசு கவர்னர் கிரன்பேடிக்கு அனுப்பியது. ஆனால் கவர்னர் அனுமதி தராமல் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மத்திய உள்துறை மாநில அரசே உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. இதனால் முன்னாள் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா வாரிய தலைவர் பதவியை நீட்டித்து உத்தரவிட்டார். ஆனால்தனக்கே வாரிய தலைவர் பதவி நீட்டிப்பு செய்ய அதிகாரம் உள்ளது என்று கூறி வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்கு கவர்னர் தடை உத்தரவு போட்டுள்ளார். இதனால் இதுவரை எம்எல்ஏக்கள் வாரிய தலைவர் பதவி நீட்டிப்பு பெறாமல் உள்ளனர். இந்த விஷயத்தில் ஏற்கனவே கவர்னருக்கு மாறான முடிவை மத்திய அரசு எடுத்தது. தற்போது விவசாயிகளின் தள்ளுபடி விவகாரத்தில் மீண்டும் கவர்னருக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

டெல்லியில் கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக அம்மாநில கவர்னர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் மாநில அரசின் அன்றாட பணிகளில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றும், மாநில அரசோடு இணைந்து கவர்னர்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியள்ளது குறிப்பிடத்தக்கது

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து