முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா - இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை - வருமானவரித்துறை அதிகாரி தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வருமான வரித்துறையினரின் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தேவைப்பட்டால் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சோதனை - விசாரணை

போலி நிறுவனங்கள் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வார காலம் தீவிர சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள். இந்த சோதனையில் பல்வேறு போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  சோதனையை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவேக் - பூங்குன்றன்...

அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகள், இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக்கின் தங்கை ‌ஷகிலா, பூங்குன்றன் ஆகியோரை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு சோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், சசிகலா, டிடிவி தினகரனின் உறவினர்களின் வீடுகள், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தகவல்கள் அடிப்படையில்...

அதன் விவரம் வருமாறு:-

வரி ஏய்ப்பு தொடர்பாக பொருளாதார உளவுத்துறை கண்காணித்து கொடுத்த தகவலின் பேரிலேயே சோதனை நடத்தபட்டது. உறுதியான தகவல்கள் ஆவணங்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான பென்டிரைவ்கள்,  லேப்-டாப்களை ஆய்வுசெய்யும் பணி தொடங்கி  உள்ளது. போயஸ் தோட்டத்தில் சசிகலாவின் 4 அறைகள், பூங்குன்றன் அறையிலும், சோதனை நடத்தப்பட்டது. 5 அறைகளின் சாவிகளையும் ஷகிலா கணவர் ராஜராஜனிடம் இருந்து பெறப்பட்டது. சோதனையில் 70க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.தேவை பட்டால் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் சோதனை நடத்தப்படும்.  இவ்வாறு  அதில் கூறப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் முதலீடு ...

சோதனை குறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்.,

சோதனையின் போது தமிழக போலீஸார் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்ததால் துணை ராணுவத்தை அழைக்கும் அவசியம் ஏற்படவில்லை. சோதனையில் கிடைத்த தகவல்கள், மற்றவர்களிடம் நடத்திய விசாரணைகள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்திருந்தால் அந்த முதலீடுகள் குறித்தும் விசாரணை நடத்துவோம், பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளோம்.

விரிவான விசாரணை ...

முன்பெல்லாம் டிரைவர்களோ, வேலையாட்களோதான் பினாமிகளாக இருப்பார்கள். ஆனால் தற்போது இவர்களே பினாமிகளாக இருப்பது இல்லை. பினாமிகள் வெளியாட்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிவது என்பது தற்போதைய காலத்தில் சிரமம். அதனை உறுதிப்படுத்த விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு வருமான வரித்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து