முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணலியில் ரூ.600 கோடியில் துணை மின்நிலையம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      சென்னை
Image Unavailable

மணலியில் ரூ.600 கோடி செலவில் கட்டப்பட்ட துணை மின்நிலையத்தை நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

200 மெகாவாட்ஸ்

 ஆசியா கண்டத்தில் முதன்முறையாக வடசென்னையில் தடையில்லா மின்சாரம் வழங்க ரூ.600 கோடியில் மணலி பகுதியில் கட்டப்பட்ட துணை மின்நிலையம் நேற்று தொடங்கப்பட்டது. வடசென்னையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், தொழில்நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க 400 மெகாவாட்ஸ் துணை மின்நிலையம் எரிசக்திதுறை சார்பில் தமிழ்நாடு மின்தொடர்அமைப்பு கழகம் சார்பில் அமைக்கப்பட்ட வளிமக்காப்பு துணை மின்நிலையம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த மின் நிலையத்தில் மின்சாரம் தடைபட்டால் மாற்று ஏற்பாடாக கூடுதல் 200 மெகாவாட்ஸ் மின்சாரம் வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த போது மணலி துணைமின்நிலையத்தில் திருவள்ளுர் கலெக்டர் சுந்தரவள்ளி மற்றும் மின்வாரிய முதன்மைபொறியாளர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் எம்.எல்.., கே.குப்பன் அ.தி.மு.க நிர்வாகிகள் முல்லை ஆர்.ஜி.ராஜே~;சேகர், எம்.ஜோசப், ராகவா எம்.சாக்ரட்டீஸ், காமராஜ், சாரதி பா.பார்த்தீபன், எம்.ஸ்ரீதர், டி.சங்கர், திருவொற்றியூர் கே.கார்த்திக் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து