திருச்சியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நிதி : அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன் எஸ்.வளர்மதி வழங்கினர்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      திருச்சி
Trichy 2017 11 21

 

திருச்சி கீழப்புலிவார் பகுதியில் கடந்த தனியார் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்த நபர்களின் குடும்பங்களுக்கும், மற்றும் காயமடைந்த நபர்களுக்கும், ரூபாய் 10 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் முதலமைச்சரின் நிவாரண நிதியினை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.

 நிவாரண நிதி

 திருச்சி மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, 11வது வார்டு பகுதி, கீழப்புலிவார் பகுதியில் கடந்த 2.09.2017 அன்று தனியாருக்குச் சொந்தமான 100 ஆண்டுகள் பழைமையான தரைதளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட கான்கீரிட் வீடு மற்றும் அதன் அருகில் இருந்த மற்றொரு இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 நபர்கள் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணநிதி வழங்க உத்தரவிட்டார்கள்.

 அதன்படி முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பழனி, ராஜாத்தி அவர்களின் மகள் செல்வி.பரமேஸ்வரிக்கு ரூபாய் 5 இலட்;சத்திற்கான காசோலையும், இடிபாடுகளில் சிக்கி இறந்த கார்த்திக் மற்றும் அவரது மகன் செல்வன்.ஹரிஸ் குடும்பத்திற்கு ரூபாய் 4 இலட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையும், விபத்தில் சிறு காயமுற்ற கண்ணன், மதிவாணன், கார்த்திக் ஆகியோருக்கு தலா ரூபாய் 25 ஆயிரத்திற்கான காசோலைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி(கிழக்கு) வட்டாட்சியர் ஜவஹர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய நிர்வாக குழு இயக்குநர் எம்.பி.வெங்கடாசலம், திருச்சிராப்பள்ளி மாவட்ட அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஜெயபால் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து