புளியங்கண்ணு அரசு மேல்நிலைபள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      வேலூர்
wj

ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பபள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில் 73மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது.

விலையில்லா மடிகணினி

இந்நிகழ்;ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் பொருளாளர் பழனி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசந்திரன், துணை கிளை செயலாளர் நாகேஷ், ஈஸ்வரப்பன், பழனி, குட்டி(எ)முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்ராக அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.அரி, முன்னாள் அமைச்சர் முகமதுஜான், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு 73மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கி சிறப்புறையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பூங்காவனம், முன்னாள் ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.கே.நிர்மலா, நகரசெயலாளர் என்.கே.மணி, முன்னாள் நகரமன்ற தலைவர்கள் வேதகிரி, சித்ராசந்தோஷம், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முல்லைவேந்தன், ராணிப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் சந்தோஷம், அம்மூர் நகரசெயலாளர் சண்முகம், ஜம்புகுளம் வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பெல் கார்த்திகேயன், முன்னாள் நகரமன்ற துணைதலைவர் ஷாபூதீன், வானாபாடி நந்தகுமார், உள்பட அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து