முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையத்தை பசுமையான நகரமாக மாற்றும் நோக்கில் 10ஆயிரம் விதைப்பந்துகள்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம், -ராஜபாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பசுமையான நகரமாக மாற்றும் நோக்கில் 10ஆயிரம் விதைப்பந்துகளை பல்வேறு இடங்களில் வீசினர்.
ராஜபாளையம் பகுதியில் வறட்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தினால் தற்போது மரங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் போதிய தண்ணீர் வசதியின்றி பொதுமக்கள் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையை மாற்றி பசுமையான நகராமாக ராஜபாளையத்தை மாற்றும் நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 10ஆயிரம் விதைப்பந்துகளை வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரி எதிரே இருந்து விதைப்பந்து வீசும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வேம்பு, புங்கை, புளி, பூவரசம் ஆகிய மரங்களின் விதைகள் அடங்கிய விதைப் பந்துகள் வீசப்பட்டன. விதைப்பந்துகள் அடங்கிய மூடைகளை சுமந்து கொண்டு 20க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ மூலம் ராஜுக்கள் கல்லூரியில் இருந்து அய்யனார் கோயில் மலையடிவார பகுதிகள் வரை விதைப் பந்துகளை வீசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து