கோபி தாலூகாவிற்குட்பட்ட பல்வேறு இடங்களையும் அலுவலகங்களையும் கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      ஈரோடு
DSC07030

கோபி தாலூக்காவிற்குட்பட்ட நாதிபாளையம் குப்பைக்கிடங்கிற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கொப்பரைத்தேங்காயால் ஏலக்கூடம் ஆயிரம் மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக்கிடங்கு தாலூக்கா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் அரசு அலுவலகங்களையும் மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில் அளுக்குளி ஊராட்சிக்குட்பட்ட குளிர்பதனக்கிடங்குகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் அங்கு நடைபெற்றுவரும் சுற்றுச்சுவர் எழுப்பும் பணியை பார்வையிட்டு குளிர்பதனக்கிடங்கின் பின்புறமும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு வரைபடங்களைக்கொண்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் குளிர்பதனக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள தானியங்களில் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதில் உள்ள குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் தூர்வாரப்பட்ட குளங்கள் குறித்தும் அவற்றின் தற்போதைய நிலைகள் குறித்தும் வருவாய்துறையினரிடம் கேட்டறிந்தார். பின்னர் வேளாண்மை வணிகத்துறையில் தற்போது உள்ள நிலைமைகள் குறித்தும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் புதிய கட்டிடங்கள் மற்றும் அலவலக சுற்றுச்சுவர் கட்டுவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலேலானையில் ஈடுபட்டு அதற்குறிய நடவடிக்கைகள் எடுக்க திட்டங்கள் தயாரிக்கும் பணிகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.

இச்செயலின் போது கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் கோவிந்தராஜன் வட்டாட்சியர் பூபதி வேளாண்மை வணிகத்துறை அலவலர்கள் வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராமநிர்வாக அலுவலர்கள் உட்பட பலதுறை அலுவலர்கள் இருந்தனர்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து