முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் செயல்பாடு குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா: இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என இந்திய அணியின் கோச் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

டிராவானது...
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாள் ஆட்டத்தின்போது விராட் கோலியின் சிறப்பான சதத்தால், இலங்கை அணிக்கு இந்தியா 231 ரன்களை  வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. 26.3 ஓவரில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அப்போது வெளிச்சமின்மை காரணமாக ஐந்தாவது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

வானமே எல்லை...
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என இந்திய அணியின் கோச் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் திருப்தியாக இருக்கிறது. எனக்கு இந்தியாவில் பிடித்த நகரங்களில் கொல்கத்தாவும் ஒன்று.  இந்த வயதிலேயே விராட் கோலி 50 சதங்களை எடுத்து முடித்துள்ளார். அவருக்கு வானமே எல்லையாக இருக்கும் என நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து