முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசோக்குமார் தற்கொலைச் சம்பவம்: அன்புசெழியனுக்கு விஷால் கண்டனம்

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: எங்கேயும் ஓடிவிட மாட்டோம் , பலத்தைப் பிரயோகப்படுத்தாதீர்கள் என்று பைனான்சியர்  அன்புசெழியனுக்கு விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வெளியிட்ட அறிக்கையில் அன்புச்செழியன் பெயர் இல்லாமல் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அன்புச்செழியின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், விஷால் அறிக்கைக்கு ஆதரவு இருந்த நிலையிலும், அன்புச்செழியன் பெயர் இல்லாததால் எதிர்ப்பும் இருந்தது.

இந்நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் விஷால் கூறியிருப்பதாவது:
அசோக் குமார் பிரச்சினையில் அன்புச்செழியன் நடந்துகொண்டது மிகவும் தவறானது. கொஞ்சமும் நியாயமற்ற இச்செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நாங்கள் அனைவரும் வாங்கிய கடனைத் திரும்பத்தரவே இருக்கிறோம். எங்கேயும் ஓடிவிட மாட்டோம். கடினமாக உழைத்து நிச்சயம் கடனைத் திருப்பித் தருவோம். எனவே, பலத்தைப் பிரயோகப்படுத்தாதீர்கள்.  இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார். அ

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து