முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து பாக். கோர்ட்டால் விடுவிப்பு

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

லாகூர்: 2008 மும்பை தாக்குதலில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் வீட்டு சிறைவில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 166 பேர் பலியாயினர்.
இந்த தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஜாமத் உத் தவா என்கிற அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவிலும் முக்கியப் பொறுப்பு வகித்தவர்.

ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசோ, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது ஹபீஸ் சயீத்தை கைது செய்து வீட்டு சிறையில் வைத்தது. இந்நிலையில், வீட்டு சிறையில் ஹைபீஸ் சயீத் வைக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பாகிஸ்தான் பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஹபீத் சயீத்தை சிறையில் அடைக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் அவரை வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து