சிவகங்கை மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடுபதிவு செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் க.லதா, பார்வையிட்டு ஆய்வு.

22 sivagangai news

சிவகங்கை - சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், புழுதிப்பட்டியில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேமிக்கப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டார்.
         அதனைத் தொடர்ந்து, செட்டிக்குறிச்சி பஞ்சாயத்தில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி  குடிநீரில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கேட்டறிந்து, வாரம் ஒருமுறை தொட்டியினை சுத்தம் செய்து குளோரினேசன் செய்ய வேண்டும் என அங்குள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மணலூர் பஞ்சாயத்து கருங்குறிச்சிப்பட்டியில் சுகாதாரத் துறையின் மூலம் ஒட்டு மொத்த துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும், அங்குள்ள மக்களிடம் தூய்மைக் காவலர் உள்ளனரா என்றும், அவர்கள் குப்பை வாங்கிச் செல்கிறாhர்களா, தண்ணீரில் பிளிச்சிங் பவுடர் போடப்படுகிறதா என்றும், குப்பைகளை தனித்தனியாக பிரித்துக் கொடுக்குமாறும், உங்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
         சின்னம்மா என்ற ஆதரவற்ற வயது முதிர்ந்த பெண்மணிக்கு உடனடியாக முதியோர் உதவித் தொகைக்கான ஆணை வழங்க வட்டாட்சியருக்கு உத்திரவிட்டார். பின்னர், கிழவயல் ஊராட்சி பொன்னடப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கு கை கழுவ சோப் மற்றும் வழங்கும் உணவு குறித்தும், காய்கறித் தோட்டம் அமைக்குமாறு வலியுறுத்தினார்.
         மேலும், எஸ்.புதூர் மத்திய கூட்டுறவு வங்கி, திருப்பத்தூர் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு தொடர்பான பணிகளையும், எஸ்.புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கண்டவராயன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருக்கோஷ்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்யும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு பணிகளை துரிதமாகச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். வேளாண் துறை அலுவலர்களிடம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், 30.11.2017-ம் தேதிக்குள் நெல் பயிர்கான பயிர்க்; காப்பீடு செய்ய கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை இணைந்து செயல்பட வேண்டுமாறு உத்திரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் திலீப்குமார், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் செல்வம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர், திருப்பத்தூர், சிங்கம்புணரி வட்டாட்சியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து