பரபரப்பான சூழ்நிலையில் இன்று புதுவை சட்டசபை கூடுகிறது நியமன எம்எல்ஏக்கள் உள்ளே நுழைவார்களா?

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      புதுச்சேரி

புதுவை சட்டமன்றத்தின் பட்ஜெ;ட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 16-ந் தேதி முடிவடைந்தது. சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதிமுறையாகும். ஏற்கனவே சட்டசபை கூட்டம் முடிந்து 6 மாதம் ஆவதால் புதுவை சட்டசபை இன்று கூடுகிறது.

சட்டசபை கூட்டம்

காலை 10.45 மணிக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார். கூட்டத்தில் விலங்குகள் வதை தடுப்பு சட்ட திருத்த முன்வரைவு நீதிமன்ற கட்டணம்,  வழக்கு மதிப்பீட்டு சட்டமுன்வரைவு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு விவாதம் நடத்தப்படுpறது. பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது. புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் பாஜக நிர்வாகிகள் சாமிநாதன், செல்வகணபதி மற்றும் சங்கர் ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசால்நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்ததால் அதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்இது தொடர்பாக சென்னை ஜகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் நியமன எம்எல்ஏக்களாக அங்கீகரித்து சட்டசபையல்இருக்கை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால்அவர்களை அங்கீகரிக்கக சபாநாயகர் மறுத்து விட்டார். நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும்முறைப்படி நியமிக்கப்படாததால் அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சட்டசபை செயலர் மூலம்அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் சட்டசபை கூட்டம் இன்று நடப்பதால் அதில்கலந்து கொள்ள 3 பேரும்திட்டமிட்டனர். அவர்களுக்குஅங்கீகாரம் வழங்கப்படாததால்அவர்கள் சட்டசபையில்  நுழைய முடியாது. ஆனால் அதையும் மீறி சட்டசபையயில் நுழைவோம் என்று 3 பேரும்அறிவித்தனர். மேலும் சட்டசபைக்குள் அனுமதிக்க உத்தர விட வேண்டும் என்று சென்னை ஜகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். வழக்கமாக சட்டனமன்றம் கூடும்போது சட்டசபை செயலர், போலீஸ் டிஜிபி, சீனியர் போலீஸ் கூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு பாதுகாப்பு கோரி கடிதம் அனுப்புவார். தற்போது நியமன எம்எல்ஏக்கள் நுழைவதை தடுக்கும் நோக்கில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க் கோரியுள்ளார். சட்டசபை நடக்கும் போது எம்எல்ஏக்களின் கார்களை சட்டசபை வளாகத்துக்குள் அனுமதிப்பது வழக்கமானது தான்  ஆனால் நியமன எம்எல்ஏக்கள் மற்ற எம்எல்ஏக்களின் காரில் உள்ளே வந்து விடக் கூடாது என்பதற்காக இன்று எம்எல்ஏக்களின் கார்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து