முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவஞ்சலி பேரணி: அ.தி.மு.க தொண்டர்களுக்கு இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அழைப்பு

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திரண்டு வருமாறு அ.தி.மு.க.வினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-

இணையில்லா அன்பு, ஈடில்லா கருணை, நிகரில்லா உழைப்பு, நினைத்து நினைத்து வணங்கி போற்றத்தக்க ஆளுமை தன்மை உள்ளடக்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  அ.தி.மு.க.வின் வெற்றியும் தமிழகத்தின் உயர்வும் தனது இரு கண்களாக கொண்டு தகைமைசால் தலைமைப் பண்புகளால் நம்மை வழிநடத்தி காத்திட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்மை விட்டு பிரிந்து ஒராண்டு நிறைவடைய போகிறது என்பதை நினைக்கும்போது நெஞ்சம் துயரத்தில் நிரம்பி வேதனை நம்மை ஆட்கொள்கிறது. இந்த மண்ணுலகை விட்டு ஜெயலலிதா பிரிந்து சென்றாலும் நம் இதயங்களை விட்டு அவரை ஒரு போதும் யாராலும் பிரிக்க முடியாது.

தமிழக மக்களுக்காகவும் அ.தி.மு.க தொண்டர் ஒவ்வொருவருக்காகவும் தன்னையே அர்ப்பணித்து மக்களால் நான் மக்களுக்காகவே நான். என்று தவவாழ்வு வாழ்ந்த ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை அ.தி.மு.க தொண்டர்களும் பொதுமக்களும் அவர் மீது கொண்டிருக்கும் அளவற்ற பாசத்தின் வெளி்ப்பாடாக நடத்திட நம் உள்ளம் துடிக்கிறது.

ஜெயலலிதாவின் உலகளாவிய புகழை பறைசாற்றும் வண்ணமும் அவர் மீது நாம் கொண்டுள்ள அன்பு .பற்று பாசத்தை எடுத்துக்காட்டும்வகையிலும் அ.தி.மு.க.வினர் லட்சக்கணக்கில் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திட அன்புடன் அழைக்கிறோம்,

அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் அறிவையும் ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் தனது வாழ்வுக்கு வழிகாட்டியாக கொண்டு வாழ்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த எம்.ஜிஆரால் வடிவமைத்து தரப்பட்ட அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக செல்வது கழத்தின் வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் அமைந்திடும் என்பதால் அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையிலிருந்து வரும் டிசம்பர் 5 ம்தேதி காலை 9-30 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு ஜெயலலிதா நினைவிடம் செல்வோம்.  நம் கண்ணீரை எல்லாம் பூக்களாக்கி ஜெயலலிதா எனும் பூமகள் பொன்மகள் நீடுதுயில் கொள்ளும் நினைவிடத்தில் சமர்ப்பி்ப்போம்,

கழகத்தையும், கழக ஆட்சியையும் கட்டிக்காத்திட ஜெயலலிதா பட்ட துயரங்களையும் தாங்கிய வேதனைகளையும் வடித்திட்ட கண்ணீரையும் பார்த்த நாம்,. ஜெயலலிதா வழியில் கழகத்தையும் ஆட்சியையும் காத்திட அன்றைய தினத்தில் உறுதியேற்போம், ஜெயலலிதா நினைவுநாளில் பங்கேற்றிட அனைவரும் வாரீர் வாரீர் .இவ்வாறு தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து