முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் காலம் கடத்தியதற்கு கோலியே காரணம்: நிரோஷன் டிக்வெல்லா

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் நிரோஷன் டிக்வெல்லா, மொகமது ஷமியை பந்து வீச விடாமல் சீண்டினார், அவ்வாறு சீண்டி ஆட்டத்தைக் காலங்கடத்துவது ஒரு உத்தியாகவே செய்யப்பட்டது என்று அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது.,

இது அனைத்தும் எப்படி தொடங்கியது என்றால், நான் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸ் அடித்தேன். லெக் திசையில் ஸ்கொயர்லெக்கில் 3 பீல்டர்கள் நிறுத்தப்பட்டனர். அதனை நடுவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன் அதன் பிறகு அந்தப் பந்து நோ-பால் ஆனது. அப்போது விராட் கோலி என்னிடம் வந்து அது நடுவரின் வேலை நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றார், இப்படித்தான் ஆரம்பித்தது.

இப்படிச் செய்து வார்த்தைப் பரிமாற்றங்களைத் தூண்டினால் காலத்தை கொஞ்சம் கடத்தலாம் என்று நான் எண்ணினேன். கோலி என் எண்ணத்தைப் புரிந்து கொண்ட கோலி தன் இடத்துக்கு விரைவில் சென்று விட்டார். அதன் பிறகு மொகமது ஷமியை நிறுத்திய விவகாரம் நடந்தது. அது ஒரு வேடிக்கைதான், அப்போது அந்த போராட்டத்தில் நான் வென்றதாகவே நினைக்க விரும்புகிறேன்.

ஷமி என்னிடம் வந்தார், இதோ பார், நான் உள்ளூர் வீரர், நான் கொல்கத்தாவைச் சேர்ந்தவன் என்றார். நான் உடனே எனக்கு அதனால் என்ன என்றேன் உடனேயே ஷமி நீங்கள் நல்ல வேகத்தில் பவுன்சுடன் வீசுகிறீர்கள் என்றேன், அவரும் திருப்தியுடன் சென்றார். நான் என் டைமை எடுத்துக் கொண்டேன் அது இந்தியர்களுக்குப் பிடிக்கவில்லை. எதிர்முனையில் கேப்டன் சந்திமால் என்னை அமைதியாக இயல்பான ஆட்டத்தை ஆடினாலே போதும் என்றார். களத்தில் என்னை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன், விராட் கோலியும் அப்படிப்பட்ட மனநிலை படைத்தவர் என்பதால் இவையெல்லாம் நடந்தது. இவ்வாறு தெரிவித்தார் டிக்வெல்லா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து