முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ் சிங் மீது பி.சி.சி.ஐ. அதிருப்தி

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ரஞ்சி டிராபி போட்டிகளில் ஆடாமல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்பயிற்சியில் ஈடுபட்ட யுவராஜ் சிங் மீது பி.சி.சி.ஐ கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இது வரை நடந்த பஞ்சாபின் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் யுவராஜ் ஆடவில்லை. விதர்பாவுக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் ஆடி 20 மற்றும் 42 ரன்களை எடுத்தார்.  காயங்களும் இல்லாத நிலையில் ரஞ்சிப்போட்டிகளைத் துறந்து என்.சி.ஏ.வில் என்ன வேலை என்று பி.சி.சி.ஐ. அதிகாரிகள் சிலர் கேள்வி எழுப்புவதாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பெயர் குறிப்பிடாத பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:-

யுவராஜ் சிங் புனர்வாழ்வு பயிற்சியில் இருப்பதாக எங்களுக்கு செய்தி எதுவுமில்லை. ஆனால் யோ-யோ டெஸ்டிற்காக சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்குத் தெரியவந்தது. ரஞ்சி போட்டியில் தேர்வு ஆவதை உத்தரவாதமாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பதை யுவராஜ் முடிவு செய்ய வேண்டும்.

உடற்தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்து விட்டு ரன்கள் எடுக்காமல் இருந்தால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வாகி விடுவாரா? இசாந்த் சர்மாவை எடுத்துக் கொள்ளுங்கள் கொல்கத்டா டெஸ்ட் போட்டிக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார், இதனால் அவர் ரஞ்சி போட்டியில் ஆடினார். இலங்கைத் தொடருக்குத் தேர்வாவதற்கு ரஞ்சி போட்டிகளில் ரன் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து