முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் எலி பிடிக்கும் பூனைக்கு அதிகரிக்கும் ரசிகர்கள்

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

அம்மான், ஜோர்டானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் லாரன்ஸ் என்ற பூனை தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இப்பூனைக்கு ட்விட்டரில் நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரிட்டிஷ் தூதரகத்தால் லாரன்ஸ் ஆஃப் அம்டன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பூனை கடந்த மாதம் விலங்குகள் காப்பகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. தற்போது லாரன்ஸ் ஜோர்டானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் பூனையின் நடவடிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும்வண்ணம் சமூக வலைதளத்தில் 'லாரன்ஸ் ஆஃப் அம்டன்' என்ற பெயரில் கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. தற்போது லாரன்ஸை 5,000க்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள். இதுகூறித்து பிரிட்டிஷ் துணை தூதர அதிகாரி லாரா டவுபன் கூறியபோது, "லாரன்ஸ் மூலம் ஜோர்டானின் வித்தியாசமான பக்கத்தை பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. மேலும் இதனால் ஜோர்டானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்துக்கு தனித்துவம் கிடைத்துள்ளது.

கருப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும் லாரன்ஸ், எலி பிடிப்பதை தவிர்த்து செய்யும் அதன் பிற செயல்கள் ட்விட்டரில் பதிவிடப்படுகிறது.

ட்விட்டரில் சில பின் தொடர்பாளர்கள் அதன் புகைப்படத்தின் கீழ் அது சற்று பருமனாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளதால் லாரன்ஸ் தற்போது சோகமாக இருக்கிறது. அதனால் அதனை சரிசெய்ய லாரன்ஸ் உடற்பயிற்சி செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து