முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

44 ஊழியர்களுடன் கடலில் மூழ்கிப் போன அர்ஜெண்டினா கப்பலைத் தேட ரஷ்யா உதவி

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

அர்ஜெண்டினா, தென் அட்லாண்டிக் கடலில் 44 ஊழியர்களுடன் காணாமல் போன அர்ஜெண்டினாவின் நீர் மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் ரஷ்யா கை கோர்த்துள்ளது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அரா சான் ஜுவான் என்ற நீர் மூழ்கிக் கப்பல் 44 ஊழியர்களுடன், தென் அட்லாண்டிக் கடலில் மின்சாரக் கோளாறு காரணமாக தொடர்பை இழந்தது.

இதனைத் தொடர்ந்து அக்கப்பலையும், அக்கப்பலில் இருந்த ஊழியர்கள் 44 பேரையும் தேடும் பணியில் அர்ஜெண்டினாவுக்கு உதவ பிரேசில், சிலி, கொலம்பியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் களம் இறங்கின.

எனினும் கப்பலைக் கண்டுபிடிக்க முடியாமல் அர்ஜெண்டினா கப்பற்படை திணறி வருகிறது.இந்த நிலையில் சவால் நிறைந்த இந்தத் தேடுதலில் அர்ஜெண்டினாவுக்கு ரஷ்யாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இதுகுறித்து அர்ஜெண்டினா அதிபர், மௌரிசியோ மார்க்ரி கூறியபோது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நீர் மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் அனுபவம் மிகுந்த ஓர் ஆய்வுக் கப்பலைத் தங்கள் நாட்டின் சார்பாக அமர்த்த உதவுவதாக தெரிவித்துள்ளார்” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து