முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'பத்மாவதி' படத்தை வெளிநாடுகளிலும் வெளியிடத் தடைகோரி புதிய மனு நவ.28-ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, 'பத்மாவதி' படத்தை டிசம்பர் 1-ம் தேதி வெளிநாடுகளில் வெளியிடத் தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நவம்பர் 28-ம் தேதி விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்றுக் குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

'பத்மாவதி' படத்தை டிசம்பர் 1-ம் தேதி வெளிநாடுகளில் வெளியிடத் தடை கோரிய மனுவை புதிய மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் ஏ.எல்.சர்மா இன்று (வியாழக்கிழமை)மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''இந்தியாவுக்கு வெளியே பத்மாவதி' படத்தை வெளியிட்டால் சமூக ஒற்றுமை கடுமையாகப் பாதிக்கப்படும். படத் தயாரிப்பாளர்கள் தகவல்களைத் தவறாகக் காண்பிக்க முயற்சிக்கின்றனர்'' என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ''நீங்கள் (வழக்கறிஞர்) மனு தாக்கல் செய்யுங்கள். நாங்கள் அதை செவ்வாய்க்கிழமை (நவ.28) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம்'' என்றனர்.

முன்னதாக 'பத்மாவதி' திரைப்படத்திற்கு மறு தணிக்கை செய்யவும், சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கக் கோரியும் வழக்கறிஞர் எல்.எல். சர்மா முதல்முறையாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ''படத்தில் உள்ள காட்சிகள் என்னவென்று தெரியாமலேயே, சிலவற்றை நீக்க வேண்டும் என படம் வெளியாகும் முன்பே மனுதாரர் கோருவது ஏற்புடையதல்ல. இதை ஏற்று எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' எனக் கூறியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து