முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த ராணுவ வீரரின் மனைவி மறுமணம் செய்தாலும் சலுகை தொடரும்: ராணுவ அமைச்சகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ராணுவத்தில் வீரதீர செயல்களுக்கான விருது பெற்ற மறைந்த வீரர்களின் மனைவிகள் மறுமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு வழங்கப்படும் பணப் படிகள் தொடரும் என்று ராணுவ அமைச்சகம் அறிவித் துள்ளது.

ராணுவத்தில் போரின்போதோ எதிரிகள் தாக்குதலின்போதோ துணிச்சலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் வீரர்களின் மனைவிகளுக்கு பணப் படிகள் சலுகை வழங்கப்படுகிறது. வீரரின் மனைவி உயிரோடு இருக்கும் வரை அல்லது மறுமணம் செய்து கொள்ளும் வரை இந்த பணப் படிகள் வழங்கப்படும். மறுமணம் செய்தால் சலுகை கிடைக்காது என்ற விதி இருந்தாலும், இறந்த வீரரின் சகோதாரரை வீரரின் மனைவி மறுமணம் செய்து கொண்டால் குடும்ப ஓய்வூதியத்துக்கு அவர் தகுதியுடையவர் ஆவார்.

இந்நிலையில், பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று வீரதீரச் செயல் விருது பெற்ற இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு அவர்கள் மறுமணம் செய்து கொண்டாலும் பணப் படிகள் சலுகை தொடரும் என்றும் மனைவி இறக்கும் வரை சலுகைகள் வழங்கப்படும் என்றும் இதற்கேற்ப விதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக வும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து