முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முட்டை விலை 20 காசுகள் சரிவு

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 485 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கடந்த இரு தினங்களில் 31 காசுகள் சரிந்துள்ளன.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 505 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து 485 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை கடந்த சில தினங்களாக தொடர் ஏற்றம் கண்டு வந்தது. இந்நிலையில் சபரிமலை சீசன் தொடக்கம் காரணமாக கடந்த இரு தினங்களில் முட்டை விலை 31 காசுகள் சரிந்தது கவலையளிப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (காசுகளில்): சென்னை 540, பெங்களூரு 520, மைசூரு 523, ஹைதராபாத் 535, மும்பை 570, விஜயவாடா 525, கொல்கத்தா 562, பர்வாலா 548, டெல்லி 567, ஹோஸ்பெட் 480 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் முட்டை கோழி ஒரு கிலோ ரூ.93 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து