முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அடர் நடவு சாகுபடி முறை தொழில் நுட்பங்கள் குறித்த தகவல்

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் .- விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில், மாவட்ட ஆட்சியர்  அ.சிவஞானம்,  தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து வேளாண்மை சம்மந்தமான பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இதற்கு முன்னர் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்  பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
   கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்  பருத்தி ஆராய்ச்சி நிலையம், பேராசிரியர் மற்றும் தலைவர் அவர்களால் பருத்தி சாகுபடியில் உயர் விளைச்சலுக்கான தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது. பருத்தியில் விதைப்பு  முதல் அறுவடை  வரையிலான காலத்தில் மேற்கொள்ள வேண்டிய  விதை நேர்த்தி, களை நிர்வாகம், உர நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் தடுப்பு முறைகள், நுண்ணூட்டச்சத்து நிர்வாகம்,  பூ உதிர்தலைத் தடுக்கவும், காய் பிடிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பருத்தி ப்ளஸ் என்ற நுண்ணூட்டக் கலவையை பூப்பூக்கும் பருவத்தில் தெளித்தல், அடர் நடவு சாகுபடி முறை   போன்ற தொழில் நுட்பங்கள் விளக்கிக் கூறப்பட்டன.
   விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்களை வேளாண்மை இணை இயக்குநர்  எடுத்துக் கூறினார். பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி தமிழநாடுஅரசு  வேளாண்மைத் துறையின் மூலம்  தயாரிக்கப்பட்ட குறும்படம் மூலம் விளக்கப்பட்டது. அக்குறும்படத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்,  மற்றும் காப்பீடு செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.
 கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களான கிராமப்புற மகளிருக்கான விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம் , விலையில்லா செம்மறிஃவெள்ளாடுகள் வழங்கும் திட்டம், மாநில தீவன அபிவிருத்தித் திட்டம்,  கோழி அபிவிருத்தி திட்டம், நாட்டுக்கோழி வளர்ப்பு, கிராம புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டம், கால்நடை காப்பீட்டு திட்டம், கால்நடை பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றைப் பற்றி  விருதுநகர் மாவட்ட  கால்நடை பராமரிப்புத் துறை  மூலம் விவசாயிகளுக்கு விபரங்கள் வழங்கப்பட்டது.
 பயிர் சாகுபடி ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக சாஸ்தா அணை மற்றும்  பிளவக்கல் பெரியாறு அணைகட்டிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டியதற்கு அரசாணை வெளியிட தேவையான பிரேரணைகள் அனுப்பப்பட்டு  விரைந்து நடவடிக்கை அரசாணை பெற்று உடன் தண்ணீர் திறந்து விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுப்பணித்துறை மூலம் உறுதியளிக்கப்பட்டது.  முன்னதாக தோட்டக்கலைத்துறை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்;ச்சி நிலையம் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டார்கள்.
   இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  சி.முத்துக்குமரன், உட்பட பல துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து