முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புவனேஸ்வர்குமார் - தவான் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தாது: கோலி நம்பிக்கை

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

நாக்பூர் : புவனேஸ்வர்குமார், தவான் இல்லாதது பாதிப்பு ஏற்படுத்தாது. எங்கள் அணியில் 15 பேரும் சர்வதேச போட்டியில் போட்டியிட தயாராக இருக்கிறார்கள் என விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் இன்று நாக்பூரில் நடக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் 94 ரன்கள் எடுத்த தவானும் நாக்பூரில் டெஸ்டில் இடம்பெறவில்லை. சொந்த விஷயம் காரணமாக நாக்பூர் டெஸ்டில் இருந்து விலகியுள்ளனர். புவனே்ஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று நடக்கும் போட்டியில் புவனேஸ்வர் குமார் மற்றும் தவான் இல்லாதது இந்திய அணிக்கு சுற்று பின்னடைவாக இருக்கும் என கருப்படுகிறது. ஆனால் அணியில் உள்ள 15 பேரும் களம் இறங்க தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு இது சிறப்பான வாய்ப்பு என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இருவருக்கும் சரியான மாற்று வீரர்களை தேடுவதில் எந்த கஷ்டமும் கிடையாது. ஏனென்றால் சர்வதேச போட்டியில் எந்த நேரத்தில் களம் இறங்கினாலும் சிறப்பாக விளையாடக்கூடிய 15 பேரை தயார் செய்து வைத்துள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் சிறப்பாக விளையாடிய இரண்டு வீரர்கள் சொந்த காரணங்களுக்காக வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் பங்கேற்க இருக்கும் மற்ற இருவருக்கு இது சிறந்த வாய்ப்பாகும். இருவரும் விளையாடாதது குறித்து நான் சிறிதும் கவலைப்படவில்லை.

நாக்பூரில் டெஸ்டில் இடம்பிடிக்கும் இரண்டு வீரர்களும் சிறப்பாக விளையாடி, தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உண்மையிலேயே புவனேஸ்வர் குமார் மற்றும் தவான் ஆகியோர் எங்களுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இருவரும் இல்லாதது மற்ற வீரர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து