முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி சட்டம் எல்லோருக்கும் புரியும்படி மாற்றியமைக்க ஜி.எஸ்.டி, கவுன்சி்ல் முடிவு

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  ஜிஎஸ்டி சட்ட விதிமுறைகளை பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை முழுமையாக மாற்றியமைக்க ஜிஎஸ்டி ஆணையம் முடிவுசெய்துள்ளது.

 நீண்ட இழுபறிக்கு பின்பு அனைத்து மாநிலங்களில் முழு ஒத்துழைப்புடன் கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரிமுறை அமல்படுத்தப்பட்டாலும், கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு போன்றவற்றை பதிவேற்றம் செய்யவும் நிகர வரயை செலுத்தவும் தேவையான படிவங்களை பூர்த்தி செய்யவும், ஜி.எஸ்.டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் ஜி.எஸ்.டி.என் இணையதளம் முழுமையாக வடிவமைப்பு செய்யப்படவில்லை. இதனை உணர்ந்த ஜிஎஸ்.டி ஆணையமும் இந்த படிவங்கள் எல்லாம் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முழுமையாக வடிவமைப்பு செய்யப்பட்டுவிடும் என்று உறுதியளித்தது.

ஜி.எஸ்.டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும் இவற்றை பதிவேற்றம் செய்வது எப்படி என்று தொழில் துறையினரும் வர்த்தகர்களும் கடும் குழப்பத்தில் தவித்தனர். மேலும், ஜி.எஸ்.டி வரிமுறையில் பெரும்பாலான நுகர்பொருட்களுக்கான வரியானது அதிக பட்சமாக இருப்பதாக அனைத்து தொழில்துறையினரும் வர்த்தகர்களும் கவலைப்பட்டனர்.

மத்திய அரசும் இவர்களில் சூழ்நிலையை புரிந்துகொண்டு தொழில் துறையினரும் வர்த்தகர்களும் தங்களின் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் நிகர வரி ஆகியவற்றை ஜி.எஸ்.டி இணையதளத்தில் செலுத்துவதற்கு கால அவகாசம் அளித்தது. இருப்பினும், பெரும்பாலான வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இன்னமும் ஜி.எஸ்.டி வரி முறையை சரிவர புரிந்ததுகொள்ள முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கூடவே மாதா மாதம் நடக்கும் ஜி.ஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பொருட்களுக்கான வரியை மாற்றியமைத்து வருகிறது. கடந்த முறை நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கூட சுமார் 178 நுகர்பொருட்களுக்கான வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் மற்றும் 5 சதவிகிமாக மாற்றியமைத்தது.

இந்த குழப்பங்களை எல்லாம் உணர்ந்தோ என்னவோ ஜி.எஸ்.டி.என் ஆணையத்தின் தலைவரான அஜெய் பூஷன் பாண்டே, ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறைக்கான சட்ட விதிகளை எளிதாக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு சட்ட வல்லுநர்களை கேட்டுக்கொண்டுள்ளார். சட்ட வல்லுநர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சட்ட ஆலோசனைகளை ஜனவரி முதல் வாரத்தில் நடக்கவிருக்கும்  அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது மத்திய வரி  மாநில வரி  ஒருங்கிணைந்த வரி யூனியன் பிரதேச வரி மற்றும் மாநிலங்களுக்கான இழப்பீட்டு வரி ஆகிய ஐந்து வகையான வரிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை எல்லாம் எளிமைப்படுத்த வேண்டும் என்று அனைத்து தொழில் துறையினரும் வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்ட வல்லுநர்களும் இவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு உரிய சட்டபூர்வ எளிய முறையிலான ஆலோசனைகளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு அளிக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி வரி முறையில், விற்பனை செய்யப்பட்ட விலைப்பட்டியலில் வருமான வரிப்பிடித்தம்  செய்வது மற்றும் வருமான வரி வருவாயை  எப்படி கணக்கீடு செய்வது போன்றவற்றிற்கு எல்லாம் எளிய முறையில் சட்ட ஆலோசனைகளை தெரிவிக்கும் ஜிஎஸ்டி ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்ட வல்லுநர்களும் ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று தங்களின் சட்ட ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வரும் ஜிஎஸ்டிஎன் ஆணையத்திற்கு அளிக்கின்றனர். ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்தே ஜிஎஸ்டிஎன் படிவங்களை பதிவேற்றம் செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகளும், தொழில்நுட்ப கோளாறுகளும் இருந்துவருகின்றது.

இதனால், தொழில்துறையினரும் வர்த்தகர்களும் தங்களின் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு, மற்றம் நிகர வரியை செலுத்துவதற்கு தடுமாறி வருகின்றனர். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே ஜிஎஸ்டிஎன் ஆணையமும் ஜிஎஸ்டி வரி முறையை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து