முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான தர விருது விழா!

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்-ஸ்ரீவி.  கலசலிங்கம் பல்கலையில்,  ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான 3வது  தர விருது விழா பல்கலை  தரஉறுதி நிர்ணய துறை சார்பில்  டாக்டர்  கே. எஸ்.  கிருஷ்ணன் கலையரங்கில்  பல்கலை துணைத்தலைவர் முனைவர்  எஸ்.  சசிஆனந்த் தலைமையில்  நடைபெற்றது.
துணைவேந்தர் முனைவர்  எஸ்.  சரவணசங்கர் மற்றும் பதிவாளர்  முனைவர் வெ.  வாசுதேவன்  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்.
முனைவர் வி.  ஆறுமுகபிரபு  வரவேற்றுப்பேசினார்
பல்கலை  தரஉறுதி நிர்ணய துறை  இயக்குநர்  முனைவர்  சிவப்பிரகாசம்  3வது ஆண்டு  ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான  தரவிருது அறிக்கை பற்றி பேசுகையில் மொத்த ஆசிரியர்களில் 125 ஆசிரியர்கள்,  புதுமையாக கல்வி கற்பித்தல்,  ஆராய்ச்சிமுறை,  மாணவர்களுக்கு அறிவுரை கூறி  தேர்வுகளில் தேர்ச்சிப்பெற செய்தல்,  பாடத்திட்டத்தை தவிர மற்ற  சர்வதேச  சான்றிதழ்கள் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்துதல் போன்ற துறைகளில்  ஈடுபாடு கொண்டதற்கான  தகுதி அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும்,  மாணவர்களுக்கு  நவீன  இன்றைய  தலைப்புகளில்  கட்டுரை  சமர்பித்தல்,  மாணவர்களுக்கு  பரிசோதனைக்கூடத்தில் புதிய புராஜக்ட் செய்ய தூhண்டுதல்  ஆகியற்றிற்காக  39 பேராசிரியர்களும் பரிசுகளும் சான்றிதழ்களும்  வழங்கப்படுகின்றன  என்றார்.
மேலும்,  117 மாணவர்களுக்கு  சிறந்த  புராஜக்ட்க்கான  கேடயமும்,  சான்றிதழும் இந்த விழாவில் வழங்கப்படுகின்றன என்று கூறினார்.
துறைக்கான  டீன்கள்  பெயர்பட்டியலை வாசிக்க  பல்கலை  துணைத்தலைவர்  கேடயங்களையும்,  சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
சிறந்த  துறைக்கான  முதற்பரிசு  கணிணி  பொறியில் துறைக்கும்,  ;இரண்டாவது பரிசு  கட்டிடத்துறை துறைக்கும்,  மூன்றாவது பரிசு  இயந்திரவியல் துறைக்கும் கிடைத்தது.
கலை மற்றும் அறிவியல் துறையில்  முதல்பரிசு சிஎஸ் ஐ டிக்கும் ,  இரண்டாவது பரிசு  எம் எஸ். டபுள்யூ துறைக்கும்,  மூன்றவாது பரிசு  வணிகவியல்துறைக்கும் கிடைத்தது.
மாணவர்களுக்கான  சிறந்த புராஜக்ட்  பரிசுகளை மாணவர்கள் பெற்றனர்.;
பேராசிரியர்கள்,  துறைத்தலைவர்கள்  ஆசிரியர்கள்,  மாணவர்கள் அனைவரும்  கலந்துகொண்டனர்.
பேராசிரியர்  ஹரிஹரசீதாராமன்  நன்றி  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து