முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்பூர் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: சுழலில் சின்னாபின்னமானது இலங்கை

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

நாக்பூர்: நாக்பூர் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அஸ்வின், ஜடேஜா சுழலில் சிக்கி திணறிய இலங்கை அணி 79.1 ஓவரில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி போராடி தோல்வியில் இருந்து தப்பி ‘டிரா’ செய்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று காலை  தொடங்கியது. இந்திய அணியில் புவனேஷ்குமார், தவான் ஆகியோருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா, முரளி விஜய் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதல் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஷமி சேர்க்கப்படவில்லை. ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அஸ்வின் அபாரம்
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சண்டிமால், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக சமரவிக்ரமாவும் கருணரத்னேவும் களமிறங்கினர். சமரவிக்ரமா 13 ரன்களில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில், புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய திரிமன்னே 9 ரன்கள் எடுத்திருந்தபோது, அஸ்வினின் அசத்தலான பந்துவீச்சில் போல்டானார்.

கருணரத்னே...
மேத்யூஸ், ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் வெளியேற, மற்றொரு முனையில் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த கருணரத்னே, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் வெளியேறினார். நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த அந்த அணியின் கேப்டன் சண்டிமால், அஸ்வின் சுழலிலும் டிக்வெல்லா, ரவீந்திர ஜடேஜாவின் சுழலிலும் வீழ்ந்தனர். அதன்பின் வந்த மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

205 ரன்களுக்கு ...
இதையடுத்து இலங்கை அணி, 79.1 ஓவரில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை துவங்கிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து