முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது: டிரம்ப்

சனிக்கிழமை, 25 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: தீவிரவாதிகளின் காண்டுமிராண்டித்தனமான தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

எகிப்தின் சினாய் பகுதியின், பிர் அல்-அபெத் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். லேசான காயமடைந்து வெளியே ஓடி வந்தவர்களை மசூதியை சூழ்ந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 235 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தில் ஃபட்டாஹ் அல் சிசியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தைப் பதிவு செய்ததாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ''எகிப்து தாக்குதலுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிராக எகிப்து எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணை இருக்கும். தீவிரவாதிகளின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை சர்வதேச சமூகம் பொறுத்துக் கொள்ள முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து