மாவட்ட அளவிலான செஸ் போட்டி: வக்கில் சரவணன் பரிசு வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      வேலூர்
Dt27  Akm  Poto

 

அரக்கோணம் நகரில் மாவட்ட அளவிhன செஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வக்கில் சரவணன் பரிசுகளை வழங்கினார்;. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் மைய பகுதியில் தூய நெஞ்ச மேனிலைப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று 26ந்தேதி மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

செஸ்  போட்டி

இந்த போட்டிகளை பால் மார்பிசெஸ் அகடமி சார்பில் ஏற்பாடு; செய்யபட்டு இருந்தது. போட்டிகள் 10 வயதிற்கு உட்பட்டவர்கள் முதல் 13, 16 மற்றும் ஓபன் கேட்டகிரி பிரிவுகள்pல் நடந்தது அரக்கோணம் சோளிங்கர், வாலாஜா, காட்பாடி, வேலூர், திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுகணக்கானவர்கள் கலந்து கொண்டனர். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ஓய்வு பெற்ற கிihம அதிகாரி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு கொண்ட பத்மாபிரசாத், ஜியோ, விக்னேஷ், மற்றும் வெங்கடேசன் ஆகிய நான்கு பேர் அவரவர் கேட்டகிரிகளில முதலிடம் பிடித்தனர். இவர்களுக்கு உரிய முதல் பரிசுகளுடன் அனைத்து தரப்பினர்களுக்கும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பா.ம.க மாநில துணை பொது செயலாளர் வக்கில் சரவணன்,

மகுடம் அரிமா சங்க தலைவர் டாக்டர் பாலாஜி, பெங்களுர் டாக்டர் சீனிவாசன், ஆகியோர் வழங்கினார்கள். மேலும், இப்போட்டிகளில் லோகேஷ், ஏழுமலை, பிரகாஷ், நாகராஜன், மூர்த்தி, ரகுபதி, உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். நடுவர்களாக மணிகண்டசாமி, மனோகர், ரவி ஆகியோர் செயல்பட்டனர்.

 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து