கோவையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படக்கண்காட்சி, அதிநவீன மின்னனு விளம்பர வாகனத்தினை அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்தார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      கோவை
NOV 26A - PHOTO EXHIBITION

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 03.12.2017 அன்று பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி மற்றும் அருகிலுள்ள 8 மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து வரப்பெற்ற அதிநவீன மின்னனு விளம்பர வாகனங்களை  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ,   தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்  ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. நூற்றாண்டு விழாவின் முன்னேற்பாடாக மாவட்டம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள், கலை நிழகழச்சிகள் என பலவும் நடத்தப்பட்டு வருகின்றது. அதில் முத்தாய்ப்பாக இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்  வாழ்க்கை வரலாறு, கலைத்துறை, அரசியல், சிறப்புத்திட்டங்கள் தொடங்கி வைத்தல், முக்கியத்தலைவர்களுடனான அரிய புகைப்படங்கள் என 200க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் போற்றுதல் மிகுந்த வாழ்க்கை வரலாறை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளது. இக்கண்காட்சியானது, இன்றும் (26.11.2017) நாளையும் (27.11.2017) பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அருகிலுள்ள மாவட்டங்களான கரூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னனு வீடியோ வாகனம், கோயம்புத்தூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நற்கருத்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிட இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனங்கள், தொடர்ந்து, வருகின்ற 02.12.2017 அன்று வரை திரைப்படங்களும், 03.12.2017 அன்று கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் நேரலையை மாவட்டத்தின் பலபகுதிகளும் ஒளிபரப்பப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இவ் அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் புரட்சித்தலைவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக தெரிந்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், விசி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், ஆர்.கனகராஜ், கஸ்தூரி வாசு, மாநரகாட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன்  மாநகர காவல் ஆணையாளர் கு.பெரியய்யா இ.கா.ப காவல்துறை மேற்கு மண்டலத்தலைவர் அ.பாரி இ.கா.ப மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகராட்சி துணை ஆணையர் காந்தமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி   அமைச்சர் பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை வரவேற்றார். நிறைவாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) அ.சுகுமார்  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து