ஜெயலலிதா நினைவுநாள் குறித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் கூட்டம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      திருப்பூர்
Thirupur

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகள் குறித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.திருப்பூர் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை வகித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார் (திருப்பூர் வடக்கு),கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்) ஆகியோர் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில்,மாவட்ட ,நகர,ஒன்றிய,வார்டு  நிர்வாகிகள்,முன்னாள் மண்டலத்தலைவர்கள்,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்,முன்னால் ஒன்றிய,ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வருகிற டிசம்பர் 5 ந் தேதி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் முதலாம் ஆண்டு  நினைவு நாளை ஒட்டி மாவட்டம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்துவது,மௌன ஊர்வலம் நடத்துவது,அன்னதானம்,நலஉதவிகள் வழங்குவது  உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து