எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் 10 ஆண்டு கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      சென்னை

எமிரேட்ஸ்ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது 10 ஆண்டு விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடியது. 10 ஆண்டுகால விமான சேவை நிறைவையொட்டி எமிரேட்ஸ் நிறுவனத்தின் (இந்தியா மற்றும் நேபாளம்) துணைத் தலைவர் ஈஸா சுலைமான் கூறியதாவது, அகமதாபாத் நகரத்திலிருந்து சரக்குகள் ஏற்றுமதியாவது மிகவும் வலுவாக உள்ளது.

10 ஆண்டுகள்

  பிரிவின் வளர்ச்சி குஜராத்திலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களின் மொத்த பங்களிப்பில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஸ்கைகார்கோ பிரிவு அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. எதிர்காலத்தில் ஸ்கைகார்கோ பிரிவின் வளர்ச்சிவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது," என்றார் அவர். எமிரேட்ஸ் நிறுவனத்தின் ஸ்கைகார்கோ பிரிவின் மேலாளர் (இந்தியா மற்றும் நேபாளம்) . கேகி பாட்டீல் தெரிவித்துள்ளதாவது, "ஸ்கைகார்கோவின் வளர்ச்சிக்கு குஜராத் எப்போதுமே பக்கபலமாக விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளை திரும்பிப் பார்க்கும்போது அகமதாபாத் நகரத்தின் செயல்பாடு சிறப்பானதாக உள்ளது. இங்கிருந்து ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு துபாய் வழியாக கொண்டு செல்லும் சரக்குகளின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது.

அகமதாபாத் நகரில் மோட்டார் வாகனம், மருந்து, பொறியியல், ரசாயனம் உள்ளிட்ட தயாரிப்புத் துறை நிறுவனங்கள் அதிக அளவில் விரிவாக்கம் கண்டு வருவதால் இதே சாதகமான நிலை தொடரும்," என்றார் அவர். வாரத்துக்கு 170 விமானங்களை இயக்குவதன் மூலம் டில்லி, மும்பை, சென்னை, கொல்கட்டா, பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களை உலகின் மிக முக்கிய 150 நகரங்களுடன் இணைக்கும் பணியினை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து