திருவள்ளுர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி; துவக்கி வைத்து மாணவர்களின் செயல் விளக்கத்தை பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      திருவள்ளூர்
Tvallur photo1

திருவள்ளுர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் மூலம் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி துவக்கி வைத்தார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பாக 2017-18-ம் கல்வி ஆண்டில் மாணவர்களிடையே அறிவியல் திறன் மற்றும் ஆர்வத்தினை வளர்க்கும் வகையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

 கண்காட்சி

இடைநிலைக் கல்வி பயிலும் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை உருவாக்கி புதிய தொழில் நுட்பத்தினை கையாளவும், ஆராயவும், அன்றாட வாழ்வில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அறிவியல் மாதிரிகளை செய்வதன் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் பாட தத்துவங்களை மாதிரிகள் மூலம் வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கிடவும், மாணவர்களிடையே தனித்திறன், கூட்டு முயற்சி, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்குதல் மற்றும் நவீன இந்தியாவை உருவாக்குவதில் அவர்களின் பங்கை ஊக்குவிக்கவும், மாணவர்களின் ஆளுமை திறன், வெளிப்படுத்தும் திறன் போன்றவற்றை வளர்த்தல் மற்றும் எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்த இக்கண்காட்சி பேருவுதவியாக அமையும்.

இக்கண்காட்சியில் அரசு, நகராட்சி மற்றும் உதவிபெறும் உயர் மேல்நிலைப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் ஒரு பள்ளிக்கு ஒரு அறிவியல் படைப்பு வீதம் (இரு மாணவர்கள் மற்றம் ஒரு அறிவியில் ஆசிரியர்) பள்ளிக்கு மூன்று நபர்கள் வீதம் 131 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு 8 தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகளால் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறினார். இக்கண்காட்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராஜேந்திரன்,மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் லோகமணி,துணை ஆய்வாளர் பல்லவச்செல்வன்,வெங்கடேஸ்வரா பள்ளி நிறுவனர் வெங்கடேசன்,பள்ளி தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து