திருச்சியில், 50வது தேசிய நூலக வார விழா அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன் , எஸ்.வளர்மதி பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      திருச்சி
Trichy 2017 11 26

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நேற்று(26.11.2017) நடைபெற்ற 50வது தேசிய நூலக வார விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்.

 நூலக வாரவிழா

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, தலைமை வகித்தார். 50வது தேசிய நூலக வார விழாவில் நூலக சேவை புரியும் நல்லோர்களுக்கு விருது வழங்கியும், போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் பேசியதாவது: மறைந்த முதல்வர் அம்மா கல்விக்காக எண்ணற்ற பல சாதனைகள் செய்திருக்கிறார்கள். அந்தவகையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியில் மாணவர்கள் நலன்களை கருத்தில் கொண்டு பல புதிய மாற்றங்களை செய்து வருகிறார். 1917-ம் ஆண்டு நவம்பர் 14-ல் சென்னையில் முதன் முதலாக இந்திய நூலகர்கள் மாநாடு நடைபெற்றது. அதன் நினைவை என்றும் போற்றும் விதமாக நவம்பர் 14 முதல் ஒரு வாரகாலத்திற்கு தமிழகமெங்கும் நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பொது மக்களிடையே நூலக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும், பொது நூலக இயக்கத்தை முன்னெடுத்து செல்லவும், தேசிய நூலக வாரவிழா பயன்படுத்தப்படுகிறது. பொது நூலக இயக்க வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. இந்தியத் திருநாட்டில் முதன் முதலாகப் பொது நூலகச் சட்டம் இயற்றப்பட்டது நம் தமிழகத்தில் தான். அதன் பயனாய் அதிக அளவில் நூலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இச்சட்டத்தின்படி, உள்ளாட்சி நிறுவனங்களால் வசூலிக்கப்படும் சொத்து வரியில் 10மூ நூலகவரியாக வசூலிக்கப்பட்டு பொது நூலகத்துறைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நூலகங்களின் மேம்பாட்டிற்கு இதுவே முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. இதன் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 3 கோடி கிடைக்கின்றது.

நூலக தந்தை

இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படும் டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் தமிழகத்தைச் சார்ந்தவர். சீர்காழியில் பிறந்தவர். இவரை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும், சிறப்பாகப் பணிபுரிந்த நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுவழங்கப்பட்டு வருகிறது. இவ்வருடம் நமது மாவட்டத்தில் திருப்பைஞ்சீலி கிளை நூலகர் வீ.கதிர்வேல் என்பவருக்கு இவ்விருது சென்னையில் நூலக வாரவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால்வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட மைய நூலகம் 35000 சதுரஅடி பரப்பளவில் பல்வேறு பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் தினசரி, பருவஇதழ்கள் பிரிவு, நூல்கள் இரவல் பிரிவு, நூல்கள் அட்டை போடும்; பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, புதியநூல்கள் ஆய்வு செய்யும் பிரிவு ஆகியனவும், முதல் மாடியில் குழந்தைகள் பிரிவு, இணையதள பிரிவு, குறிப்புதவி நூல்கள் பிரிவு, போட்டித்தேர்வு மைய பிரிவு, மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம் ஆகியனவும் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட மைய நூலகத்திற்கு நாள்தோறும் 1000 வாசகர்கள் வருகை புரிகின்றனர்.

600-க்கும் அதிகமான நூல்கள் வாசக உறுப்பினர்களால் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு படிக்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில, மாவட்ட மைய நூலகம் அல்லாது 8 முழுநேர கிளை நூலகங்கள், 56 கிளை நூலகங்கள், 65 ஊர்ப்புற நூலகங்கள், 12 பகுதிநேர நூலகங்கள் மொத்தம் 142 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தலா ரூ.1000- நன்கொடை வழங்கி 5,705 பேர் புரவலர்களாகவும், ரூ.5000- நன்கொடை வழங்கி 41 பேர் பெரும் புரவலர்களாகவும், ரூ.10,000- நன்கொடை வழங்கி 3 பேர் கொடையாளர்களாகவும் சேர்ந்துள்ளனர்.

ரூ50லட்சத்தில் கூடம்

மாவட்ட மைய நூலக இரண்டாவது தளத்தில் மத்திய அரசால் ரூபாய் 50 இலட்சம் (நேஷ்னல் மிஷன் ஆன் லைப்ரரி) மதிப்பில் மன்றக் கூடம் (கூட்ட அரங்கம்) கட்ட டெண்டர் விட்டு விரைவில் வேலை துவங்கப்பட இருக்கிறது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை இப்பணியைச் செய்து வருகிறது. அரங்கம் கட்டப்படும் நிலையில் 200 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை காணலாம். அடுத்த ஆண்டு நூலக வார நிறைவு விழா அந்த புது அரங்கத்தில் நடத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பேசினார்.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து