புஞ்சைகடம்பங்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் 17 இடங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      கரூர்

கரூர் ஒன்றியம், புஞ்சைகடம்பங்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் 17 இடங்களில் பொதுமக்களிடமிருந்து பொதுமக்களின் தேவைகள், குறைகள் பொதுவான குடிநீர், கழிவறை, மின்விளக்கு தொடர்பாக மனுக்களை 17 இடங்களில் பொதுமக்களின் இருப்பிடம் தேடிச்சென்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ( 26.11.2017 ) மனுக்களை பெற்று உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு மேற்கொண்டார்.

 உடனடி நடவடிக்கை

இந்த ஆய்வின் போது புஞ்சைகடம்பங்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த மேட்டுப்பாளையம், ஓட்டகுலம், புஞ்சை கடம்பங்குறிச்சி, அரமரத்தான் கோவில், கடம்பங்குறிச்சி, எம்.ஜி.ஆர்.நகர், பாரதிநகர், கோரைக்காடு, சின்னவரப்பாளையம், சின்னவரப்பாளையம்காலனி, பெரியவரப்பாளையம், பெரியவரப்பாளையம் காலனி, பால்வார்பட்டி, பள்ளத்தோட்டம், பண்டுதகாரன்புதூர், பண்டுதகாரன்புதூர் காலனி, அருமைக்காரன் புதூர் ( தூளிப்பட்டி) , சின்னவள்ளிபாளையம், பெரியவள்ளிபாளையம், பெரியவள்ளிபாளையம் காலனி ஆகிய 17 இடங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் பெற்றார்.

அமைச்சர் பேட்டி

இந்நிகழ்வின்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது மக்களை தேடி அரசு என்ற உன்னத நோக்குடன் மக்கள் இருப்பிடம் தேடி சென்று பொதுமக்களின் குறைகள் தேவைகள் மனுக்களாக பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் குடிநீர், மின்விளக்கு தொடர்பாக மனுக்கள் வரப்பெறுகின்றன. பொதுமக்களிடமிருந்து மனுக்கள் குறித்து சமத்தபட்ட துறை அலுவலர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடி தீர்வு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் மண்மங்கலம் வட்டாட்சியர் ராம்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கமலக்கண்ணன், வி.., மார்கன்டேயன், காளியப்பன் ஊராட்சி செயலர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து