துாத்துக்குடியில் டிஎஸ்பி ஜீப் கண்ணாடி உடைப்பு : 20 பேர் மீது வழக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      தூத்துக்குடி

துாத்துக்குடியில் டிஎஸ்பியின் ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டதில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்ணாடி உடைப்பு

துாத்துக்குடி,மாதவன்நாயர் காலனியில் வசித்து வருபவர்கள் அகமது ராஜா.கவிதா (24).தம்பதியினர்.அகமது ராஜாவின் தாயாரான பாத்திமாவிற்கும், கவிதாவிற்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.அதுபோல் நேற்றும் மாமியாருக்கும் மரு மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அகமது ராஜா இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.அப்போது கடும் கோபமடைந்த பாத்திமா வீட்டில் இருந்த அரிவாளால் கவிதாவை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக இறந்த கவிதாவின் உடலை எடுக்க வீட்டுக்குள் சென்றபோது உடலை எடுக்க கவிதாவின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தொடர்ந்து அருகிலிருந்த 3 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது.மேலும் ரூரல் டிஎஸ்பி சீமைச்சாமியின் ஜீப் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கவிதாவின் உறவினர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து