நெல்லை மாவட்டத்தில் விரைவில் அதிமுக புதிய நிர்வாகிகள் : முத்துக்கருப்பன் எம்.பி.தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்திற்கு விரைவில்  புதிய அதிமுக நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என எம்.பி.முத்துக்கருப்பன் தெரிவித்தார்.இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

பேட்டி

1989க்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை தமிழக முதல்வரும்,துணை முதல்வரும் மீட்டெடுத்துள்ளனர் ,இதனால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர் ,எனக்கு பிறகு அதிமுக 100ஆண்டுகள் வாழும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்து வாக்கு என்றைக்கும் நிலைத்து இருக்கும் ,அவரது திட்டத்தை இந்த ஆட்சி தொடர்ந்து நடத்தும் ,மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தமிழகத்தில் சாலை மேம்பாட்டுக்காக ரூ.1லட்சம் கோடி ஒதுக்கியுள்ளார் இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும்,மாற்று முகாமில் உள்ள அதிமுகவினர் படிப்படியாக இனி முதல்வர் எடப்பாடி பக்கம் வந்து விடுவர் ,ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும்.நெல்லை மாவட்டத்திற்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் ,இதற்கான முடிவுகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வரும் விரைவில் எடுப்பார்கள்,தமிழக நலன் சார்ந்தே பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறோம் மக்களுக்கு பாதிப்பென்றால் அதை எதிர்க்கவும் தயங்க மாட்டோம்,,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டையே பின் பற்றுகிறோம்,போயஸ் தோட்டத்தில் வருமான வரித்துறை சோதனையிட்டது உண்மையில் மனக்கஷ்டத்தையே எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது இவ்வாறு அவர் கூறினார் ,பேட்டியின்போது அதிமுக நிர்வாகிகள் தச்சை கணேச ராஜா ,செந்தில் ஆறுமுகம்,மகபூப் சான்,இளமதி,காமராஜ்,தச்சை மாதவன்,வழக்கறிஞர் பரமசிவன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து