முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துக்கள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி கலெக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2017      தேனி
Image Unavailable

 தேனி.-தேனி-அல்லிநகரத்திலுள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் பற்றி இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கான  விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  துவக்கி வைத்தார்.
 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தற்போது இருசக்கர வாகனங்களால் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றது. இதுவரையில் இந்த ஆண்டு 2017-ல் மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 21431 உயிரிழப்பு விபத்துக்களில் 4730 விபத்துக்கள் இருசக்கர வாகனங்களினால் ஏற்பட்டு உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இவ்விதமான விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்பை தடுத்திட பலவிதமான நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இருசக்கர வாகன ஒட்டுநர்கள் போக்குவத்து விதிகளை கவனித்து பொறுப்புணர்வுடன் வாகனத்தை ஓட்டுவதற்கு அசல் ஓட்டுநர் உரிமம் வைத்்பது அவசியமாகும். ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தேனி மாவட்டத்தில் முதன்மைச்செயலர் மற்;றும் சாலைப்போக்குவத்து ஆணையர் அவர்களின் வேண்டுகோளின்படி மொத்தம் உள்ள 7 இருசக்கர வாகன விற்பனை நிலையங்களில் புதிய நடவடிக்கையாக போக்குவரத்துத்துறை மற்றும் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மூலம் “சாலைப்பாதுகாப்பு முனையம்” ஆரம்பிக்கப்பட்டு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அதற்குத்தேவையான ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய குறுந்தகடு (ஊனு) மற்றும் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் (Pசiவெநன ஆயவநசயைடள) வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே அனைத்து இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிந்தும், வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்துடனும் போக்குவரத்து விதிகளை அறிந்து பின்பற்றியும் வாகனத்தை இயக்கி விபத்துகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) சுரேஷ்  வாகன ஆய்வாளர்கள் செல்வம்  ராஜ்குமார்  வெங்கடேசன்  ஹோண்டா விற்பனை நிலைய உரிமையாளர் விவேக்ராம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து