முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூகுள் பயன்படுத்துவதால் மறதி நோய் ஏற்படும் : நிபுணர் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் :  அதிகளவு கூகுள் சேவையை பயன்படுத்துவதால் நினைவாற்றலை தூண்டும் செல்கள் அழிக்கப்பட்டு மறதி நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர் எச்சரித்துள்ளார்.

சர்வதேச அளவில் யுமென்சியா எனப்படும் மறதி நோயால் 4 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2050ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

மறதி நோய் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலை நிபுணர் பிராங்கன் மூரே ஈடுபட்டார். மூளைக்கு வேலை கொடுத்தால்தான் அது ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அதற்கு நாம் வேலை கொடுப்பதில்லை.

நமது மூளை செய்ய வேண்டியதை கூகுள் தேடல் இணையதளத்தை பயன்படுத்தி செய்து விடுகிறோம். இதனால் மூளையின் நினைவாற்றலை பயன்படுத்தாமல் சட்டென்று இணையதளத்துக்கு சென்று விடுகிறோம். இதனால் மூளையின் நினைவாற்றலை தூண்டும் கிரேசெல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து