முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்டு: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியிலும் இங்கிலாந்து அணியை 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேயா வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட்டில் வெற்றி
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 442 ரன்களும், இங்கிலாந்து அணி 227 ரன்களும் எடுத்தன. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

223 ரன்களுக்கு அவுட்
பின்னர் 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் ஜோ ரூட் 67 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட்கள் எஞ்சியுள்ள நிலையில், கடைசி நாளில் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து களமிறங்கியது. ஆனால் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை மளமளவென இழந்தது. கடைசி நாளில் இங்கிலாந்து அணி 47 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து