Idhayam Matrimony

3.2 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு: பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா  திட்டத்தின்கீழ் இதுவரை 3.2 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

ஏழை குடும்பப் பெண்கள் அடுப்படியில் விறகு மூட்டி சமைப்பதிலிருந்து விடுபெறும் வகையில் பிஎம்யுஒய் திட்டமானது கடந்த ஆண்டு மே 1-ம் தேதி வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு எரிவாயு அடுப்பு, காஸ் சிலிண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1,600 ஆகும். மூன்று ஆண்டுகளில் 5 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டிலேயே பாதிக்கும் மேல் இலவச எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

1955-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை இந்தியாவில் 13 கோடி முதல் 14 கோடி குடும்பங்கள் மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தின. ஆனால் மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 21.4 கோடியாக உயர்ந்துள்ளது. - பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

முதலாண்டு எரிவாயு சிலிண்டர் உபயோகம் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. 60 சதவீத குடும்பங்கள் ஆண்டுக்கு 4 சிலிண்டர்களை வாங்கியுள்ளனர். இது இத்திட்டத்துக்குக் கிடைத்த சிறந்த வரவேற்பு. இலவச திட்டத்தில் எரிவாயு சிலிண்டர் பெற்றவர்கள் மீண்டும் சிலிண்டர்களை வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்ததுடன், மலைப் பகுதிகளில் சில இடங்களில் இன்னமும் விறகு அடுப்பு பயன்படுத்தும் பழக்கம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

சுத்தமான சமையல் சுற்றுப்புறச் சூழல் காப்பு உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் விறகடுப்பு சமையலால் பெண்கள் மூச்சு சார்ந்த நோய்களுக்கு ஆளாவதிலிருந்து காப்பதும் பிரதான நோக்கமாகும். உலக சுகாதார ஆய்வறிக்கையின்படி ஒரு மணி நேரம் விறகடுப்பில் சமையல் செய்வதால் ஏற்படும் சூழல் கேடானது 400 சிகரெட் எரிவதால் ஏற்படும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதான் தெரிவித்தார்.
1955-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை இந்தியாவில் 13 கோடி முதல் 14 கோடி குடும்பங்கள் மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தின. ஆனால் மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 21.4 கோடியாக உயர்ந்துள்ளது.

தற்போது 77 சதவீத வீடுகளில் சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. அடுத்த 2 அல்லது 4 ஆண்டுகளுக்குள் 100 சதவீதம் வீடுகளும் சமையல் எரிவாயு பயன்படுத்தும் நிலை ஏற்படுத்தப்படும்.
அதிகரித்துவரும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய எல்பிஜி நிரப்பு நிலையங்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து