முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ: தென்கொரியாவில் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் கமிட்டிக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு பல வீரர்களின் பதங்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஊக்கமருந்து சோதனையில் சிக்கி பல ரஷ்ய வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சோதனைகளில்....
இந்நிலையில் கடந்த முறை ரஷ்யாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருத்து பயன்படுத்தியது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த 17 மாதங்களாக நடத்திய விசாரணையில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர், வீராங்கனைகள் அந்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் ஊக்கமருந்துகளை பயன்படுத்தி ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வந்தது பல்வேறு கட்ட சோதனைகளில் தெரியவந்தது.

ரஷ்யாவுக்கு தடை
இந்த நிலையில் ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி அளிப்பதா அல்லது தடை விதிப்பதா என்பதை முடிவு செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு கூடியது.இதில் தென்கொரியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊக்கமருந்து சோதனையில் வெற்றி பெற்ற ரஷ்ய வீரர், வீராங்கனைகள், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள ரஷ்ய வீரர்கள் தனி நபர்களாக களம் இறங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலந்துகொள்ளும் வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் வேண்டுமானால் போட்டியில் கலந்துகொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கொடி, சீருடை போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து