முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா இனி பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே சமாதான நடவடிக்கையில் அங்கம் பெற முடியாது பாலஸ்தீன இயக்க அமைப்பு செயலாளர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

ஜெருசலேம்: ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து 'டிரம்ப் தனது வாழ்நாளில் பெரும் தவறை செய்துவிட்டார் என்று பாலஸ்தீன விடுதலை இயக்க அமைப்புப் செயலாளர் சாப் எரட்காட் கூறியுள்ளார்.

கடந்த 1967-ல் மத்திய கிழக்கு போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இதற்கு அரபு நாடுகள் பலத்த கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பாலஸ்தீன நாடாளுமன்ற உறுப்பினரும், பாலஸ்தீன விடுதலை இயக்க அமைப்பு செயலாளருமான சாப் எரட்காட் "ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து டிரம்ப் தனது வாழ்நாளில் பெரும் தவறை செய்துவிட்டார். டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்கா இனி பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே சமாதான நடவடிக்கையில் அங்கம் பெற முடியாது" என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து