முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: டிரம்ப் அறிவிப்பால் பாலஸ்தீனத்தில் கலவரம் வெடிக்கும் அபாயம்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் :  இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பு முஸ்லீம் நாடுகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலஸ்தீன பகுதியில் கலவரம் வெடிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேம் நகரம் கிறிஸ்துவர்களின் புனித நகரமாக உள்ளது. ஜெருசலேமின் ஒரு பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி பாலஸ்தீனம் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரிலும், பாலஸ்தீன தலைநகரம் ஜெருசலேம் அருகே உள்ள ரமல்லாவிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று  அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசியதாவது,

இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்தான் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இதற்கு ஒப்புதல் அளித்தால் இரு நாடுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்கா ஆதரவு அளிக்கும். இவ்வாறு டிரம்ப் பேசினார். இந்த அறிவிப்பை வெளியிட்டதும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அமெரிக்காவின் முடிவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே பாலஸ்தீனத்தில் காசாவில் அமெரிக்காவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் அமைப்பு பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகான் உடனடியாக இஸ்லாமிய கூட்டமைப்பின் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிசும் இது சம்பந்தமாக கவலைகளை வெளியிட்டுள்ளார். மொத்தத்தில் டிரம்ப்பின் இந்த முடிவு பாலஸ்தீனத்தில் கலவரம் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து