அழகப்பாபல்கலைக்கழகத்தில் புவி அறிவியல் துறை துவக்கம்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      சிவகங்கை
8 siva news

காரைக்குடி: -தேசியதர நிர்ணைய குழுவால் யூதகுதியைப் பெற்று இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முன்னிலை வரிசையில் இருக்கும் காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகம் தற்பொழுது புவி அறிவியல் (புநுழுடுழுபுலு) என்ற துறையைத் துவங்கி உள்ளது. வள்ளல் அழகப்பர் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அழகப்பா கல்லூரியை துவங்கும் பொழுது புவி அறிவியலை நம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாக இனம் கண்டு இத்துறையை துவக்கினார். இப்போது, அழகப்பாபல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களின் கண்டுபிடிப்புக்களை அகில உலகத்தின் பார்வைக்கு எடுத்து சென்றுள்ள துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா, அவர்கள் புவி அறிவியலை தேசிய வளர்ச்சிக்கு மிக ஆழமாகப்பயன்படுத்துவதற்காக இத்துறையைத் துவக்கியுள்ளார். இதுபற்றி கடந்த நவம்பர் 24, 2017 அன்று நடைபெற்ற பத்திரிகை மற்றும் ஊடகங்களின் கலந்தாய்வில் தெரிவித்தார்.
அப்போது புவியியல் அறிஞரும், காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், தற்பொழுது அழகப்பாபல்கலைகழகத்தின்; மதிப்புமிகு பேராசிரியருமான பேரா.சோம.இராமசாமி அவர்கள் புவி அறிவியலின் மகத்துவத்தையும், அழகப்பாபல்கலைக்கழகத்தில் இத்துறையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
விண்வெளிசார் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்திய புவித்தட்டை சுமார் 65 மில்லியன் ஆண்டுகளில் 6500கி.மீ வடக்கே தள்ளிய அழுத்த சக்தியானது இன்றும் வலுவாக உள்ளது என்றும், அச்சக்தி இந்தியத்தட்டை வடக்கே தள்ளுவதாலும், ஆனால் அதேசமயம் வடக்கில் இருக்கும் இமயமலை நகரவிடாமல் தடுப்பதாலும், இந்திய தட்டு மண்புழுபோல் கிழக்கு-மேற்காக பெரியமேடுகளாகவும் பள்ளங்களாகவும் மாறி மாறி தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே இமயமலையின் அடிவாரம் வரை உருவாகிவருகின்றன. மேலும் இந்தசக்தியால் இந்தியதுணைக்கண்டத்தில ;பலதிசைகளில் நீளமான மிகப்பெரிய வெடிப்புகள் உருவாகி வருகின்றன.
மேலும், தென்பெண்ணை ஆறு திருவெண்ணெய் நல்லூருக்கு அருகே புதையுறுவதும், காவேரிநதி தஞ்சாவூர் டெல்டாபகுதியில் திருச்சிராப்பள்ளி-வேதாரண்ணியம் பாதையில் இருந்துதிருச்சிராப்பள்ளி-கொள்ளிடம் பாதையில் மாறியுள்ளதும், 25,000 பிறைவடிவக் குளங்களால் தனித்தன்மை வாய்ந்த வைகை டெல்டா உருவாகி உள்ளதும்,தமிழ்நாட்டின் பலநகரங்களின் (சென்னை,காரைக்குடி) கீழேநதிகள் புதையுண்டு இருப்பதும் வெளிக் கொணரப்பட்டுள்ளன. இதுபோன்ற நிலஅசைவுகள் ,நதிகளின் செயல்பாடுகள் மற்றும் கடலோர நீரோட்டச் சக்திகள் ஆகியவை இணைந்து இந்தியாவின் கடற்கரைபகுதிகளை உருவாக்குவத்தோடு அவற்றின் இயற்கைவளங்களையும், இயற்கைச் சீற்றங்களையும் கட்டுப்படுத்துவதாகவும் அவர்மேலும் கூறினார்.
 ஆகவே புதிதாக துவங்கப்பட்ட புவிஅறிவியல் (யுPPடுஐநுனுபுநுழுடுழுபுலு)துறையானது இச்செயல்பாடுகளை ஆராய்ந்து அவற்றின் மூலம் காவிரி மற்றும் வைகை டெல்டா பகுதிகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறிதல், வெப்பநீர் ஊற்றுகளின் கணிப்பு, வைகையில் உள்ளசுமார் 25,000 பிறைவடி வகுளங்களைப் புத்துயிர் ஊட்டி நீர்வள ஆதாரங்களைப் பெருக்குதல், புதிதாக உருவாகிவரும் பூமி வெடிப்புகளால் நிலத்தடிநீரின் தாக்கம்  மற்றும் அவற்றின் மூலம் நிலத்தடிநீர் வளம் கணித்தல், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காணப்படும் நீண்ட கடற்கரை மணல் மேடுகளில் ஒருங்கிணைந்த நிலத்தடி நீரோட்ட கணிப்பு, இராமநாதபுரம்  கடலோர பகுதிகளில ;உள்ள காயல்களில் சிறிய துறைமுகங்கள்,சிறியகப்பல் மற்றும் படகுகள் கட்டுமான தொழில் உருவாக்குதல் பற்றிய ஆய்வு,கடலோரபகுதிகளில் கடல் நீரோட்டத்தை ஆராய்ந்து அவற்றின் மூலம் இராமர்-சேதுபாலம் உருவானதைக் கண்டறிதல், கச்சத்தீவிற்கும் தமிழ்நாடுநிலபகுதிக்கும் இடையே உள்ளநிலப் பாலத்தை கண்டறிந்து கச்சத்தீவு உருவானதைக் கணித்தல்,வைகைவடி நிலங்களில் கடந்த காலதுறை முகங்களின் தடயங்களைக் கண்டறிதல், பக்கிங்காம் கால்வாயைதமிழகத்தின் கடலோர பகுதிவழியாக வடக்கே முட்டுக்காட்டிலிருந்து தெற்கே தூத்துக்குடி வரைபுனரமைத்து நீட்டித்தல்  போன்ற புதிய பல ஆய்வுகளை இத்துறை மேற்கொள்ளும் என்று கூறினார்.
  

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து