முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.44,000 கோடி எல்.ஐ.சி முதலீடு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

நடப்பு நிதி ஆண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) ரூ.44,000 கோடியை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 52 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.29,000 கோடி அளவுக்கு எல்ஐசி முதலீடு செய்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ.39,224 கோடி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.18,000 கோடி மட்டுமே முதலீடு செய்திருந்தது. கடந்த நிதி ஆண்டு முழுவதுமே ரூ.47,000 கோடி மட்டுமே எல்.ஐ.சி முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து