முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்போஸ்தல பிராட்டஸ்டன்ட் திருச்சபையின் பேராயராக குரு.எஸ்.மாணிக்கம் பதவி ஏற்பு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

அப்போஸ்தல பிராட்டஸ்டன்ட் திருச்சபையின் பேராயராக நாசரேத் தூயயோவான் கதீட்ரலில் முன்னாள் தலைமைக் குருவானவராக பணியாற்றிய குருவானவர் எஸ்.மாணிக்கம் பதவி ஏற்றுக்கொண்டார். அவ து பதவி ஏற்பு விழாவில் பத்துக்கும் மேற்பட்ட பேராயர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

புதிய பேராயர் பதவியேற்பு

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தை சேர்ந்தவர் குருவானவர் எஸ்.மாணிக்கம். இவர் தனது பள்ளி, கல்லூரி படிப்புகளை சாயர்புரத்தில் படித்துவிட்டு இறையியல் பட்டபடிப்பை கல்லூரியில் முடித்தார். தனது 25 வயதில் திருநெல்வேலி திருமண்டலத்தில்,குருவாக அபிஷேகம் பெற்றார். 1981 முதல் 1983 வரை பாளையங்கோட்டை கதீட்ரலில் உதவி குருவா னவராகவும்,தன்னுடைய 32-வதுவயதில் இந்திய மிஷனெரி சங்க பொதுக் காரியதரிசியாகவும் பொறுப்பேற்றார்.இளம்வயதில் இவர்,இந்திய மிஷனெரி சங்கபொதுக்காரியதரிசியாக பணியாற்றியவர் என்ற பெருமையை பெற்றார்.  திருநெல்வேலி திருமண்டலம் இரண்டாகபிரிக்கப்பட்டு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் உதயமானதும் 2006-இல் நடைபெற்ற பேராயர் தேர்வு பட்டி யலில் 4 பேர்களில் ஒருவராக வெற்றி பெற்றார். 2007 முதல் 2009-வரை திருமண்டலத்தின் குருத்துவச் செயலாளராக பணியாற்றினார். 2014 முதல் 2015 வரை நாசரேத் தூயயோவான் கதீட்ரலில் தலைமைப் பாதிரியராக வும்,அதன்பின் 2 ஆண்டுகள் துபாயில்உள்ள தமிழ் சி.எஸ்.ஐ. திருச்சபையில் ஆயராகவும் பணியாற்றியுள்ளார்.சி.எஸ்.ஐ. நிர்வாகத்தில் 38 ஆண்டு கள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.இவரது பணியை பாராட்டி அப்போஸ்தல பிராட்டஸ்டன்ட் திருச்சபையின் பிரதமப்பேராயர் டாக்டர்.எஸ்.எம். ஜெயக்குமார்,அப்போஸ்தல பிராட்டஸ்டன்ட திருச்சபையின் பேராயராக அறிவித்தார்.

பேராயராக அறிவிக்கப்பட்ட குருவானவர் எஸ்.மாணிக்கம் பதவி ஏற்பு விழா சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள எபிரோன் ஆலயத்தில் வைத்து நடந்தது. அப்போஸ்தல பிராட்டஸ்டன்ட் திருச்சபையின் புதிய பேராயராக குருவானவர் எஸ்.மாணிக்கத்தை அப் போஸ்தல பிராட்டஸ்டன்ட் திருச்சபையின் பிரதமப் பேராயர் டாக்டர் எஸ்.எம்.ஜெயக்குமார் திருச்சபையில் பிரகடனம் செய்து பேராயராக அபிஷேகம் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு கலைமாமணி, செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் தலைமை வகித்தார்.ஆர்ச் பிஷப் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா,பிஷப் டாக்டர் வி.தேவசகாயம், பிஷப் டாக்டர் டி.தயானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராயர்கள் டாக்டர் சி.இ.ராஜ்கிஷோர், டாக்டர் பிரான்சிஸ் தங்கத்துரை, டாக்டர் பி.ஆர்.ஆசீர்வாதம், டாக்டர் எஸ்.பிரடி, டாக்டர். கொர்னேலியஸ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் எஸ்.இனிகோ இருதயராஜ், ஆங்கலிக்கன் திருச்சபை பேராயர் ராஜ் கிஷோர் உள்பட திரளான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ஷேரன், டாக்டர் ஏ.வெஸ்லி, டாக்டர் டி.பிரபு ஆகியோர் தலைமையில் விழாக்குழு வினர்கள் டாக்டர் எல்.ஏ.சுந்தர்ராஜ், டாக்டர் எல்.ராபர்ட்,டாக்டர் ஜெகதீஷ், டாக்டர் ரவீந்திரன், டாக்டர் ரஷ்கின்,டாக்டர் ஏ.சாமுவேல்,டாக்டர் சார்லஸ், ரெவரென்ட் இதயதீபா,ரெவரென்ட பியூலா, ரெவரென்ட ஜெயந்தி, பாஸ்டர் அனிதா மற்றும் சபைமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து