திருநெல்வேலியில் அறிவியல் கண்காட்சி கலெக்டர் சந்தீப் தந்தூரி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      திருநெல்வேலி
nellai collector science exhibition opening

திருநெல்வேலி பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் சார்பில், மாவட்ட அறிவியல் கண்காட்சி  நடைபெற்றது. இக்கண்காட்சியை கலெக்டர்சந்தீப்தந்தூரி,  தொடங்கி வைத்து பார்வையிட்டார்.தொடக்க விழாவில் கலெக்டர் பேசியதாவது.

அறிவியல் கண்காட்சி 

மாவட்ட அளவில் மாணவ, மாணவியர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்துவது அவசியமான ஒன்றாகும். இதன் மூலம், மாணவர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். நமது கல்வி அமைப்பில் பாடத்திட்டங்கள் கட்டுரை வடிவில் உள்ளது. இது போன்று அறிவயில் கண்காட்சியில் செயல் விளக்க முறையில் நடத்துவதால் மாணவ, மாணவியர்களின் அறிவுத்திறன் மேம்படும். அறிவியல் கண்காட்சியில் பயோகேஸ் மாதிரி, சத்தான உணவுகள், கழிவு பொருட்களில் இருந்து மறு சுழற்சி முறைகள் எளிமையான மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளது.இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள சிறந்த செயல்விளக்கங்களுக்கு முதல் பரிசாக ரூ.1500-ம் இரண்டாம் பரிசாக ரூ.1000ஃ-ம், மூன்றாம் பரிசாக ரூ.500ஃ-ம் வழங்கப்படுகிறது. இது போன்ற அறிவியல் கண்காட்சியில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டும். பங்கேற்பு என்பது மிகவும் அவசியமாகும்.மாணவ, மாணவிகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவன வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் குழுக்கைள அமைத்து தூய்மை பணிகளை கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகங்களை தூய்மையாகவும், கொசுப்புழு உற்பத்தியாகாமல் வைத்திருக்கும் பொறுப்பு ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு. தமிழக ஆளுநர்  பேருந்து நிலைய பகுதியை சுத்தம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். பள்ளி வளாகம் மட்டுமின்றி தாங்கள் குடியிருக்கும் வீடுகள், தெருக்கள் பகுதியையும் தூய்மையாக வைத்திருக்க விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். இக்கண்காட்சியில் பங்கேற்ற அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன் எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியல் முதன்மைக் கல்வி அலுவலர் கோ.தனமணி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபாண்டி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு, பள்ளி முதல்வர் ஜான்சன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து