ஆயுள் தண்டனை கைதியை கொலை செய்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை: சேலம் நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      சேலம்

 

கடந்த 2014 ஆம் ஆண்டுகொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்தவரை பழிக்கு பழி வாங்கும் நோக்கில் கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில்நீ 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது.

ஆயுள் தண்டனை

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் அசாருதீன். தனது தங்கை காதலித்து திருமணம் செய்ததது தொடர்பாக சேலம் மேட்டு தெருவை சேர்ந்த மெகபூப் என்பவரை கடந்த 2010 ஆண்டு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றார். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளியே வந்த அசாருதீன், மேட்டு தெரு பகுதியிலேயே அலுவலகம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி, தனது அலுவலகத்தில் நண்பர்களுடன் இருந்த போது, அலுவலத்திற்குள் நுழைந்த கும்பல், அசாருதீனை பயங்கர ஆயுதங்களால் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் நகர காவல்துறையினர் இந்த கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அசாருதீனால் கொலை செய்யப்பட்ட மெகபூப்பின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் கோட்டை மற்றும் மக்கான் தெருவை சேர்ந்த எழு பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் முன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழில், குற்றம் சுமத்தபட்ட 1. அமானுல்லா , 2. சபீர் அகமது, 3. சிவா, 4. யாசின், 5. முகமது உசேன், 6. ஜீவா மற்றும் 7. சதா என்கிற முபாரக் ஆகிய எழு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதனை தொடர்ந்து ஆயுள் தண்டனை பெற்ற எழு பெரும் பலத்த பாதுகாப்போடு கோவை மத்திய சிறைசாலைக்கு அழைத்து செல்லபட்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து